×

சின்னமாரியம்மன் கோயில் மாசி திருவிழா தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

இடைப்பாடி, மார்ச் 8:  இடைப்பாடி அருகே, சின்னமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி, தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
  இடைப்பாடி நகராட்சியில் உள்ள கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோயிலில், மாசி திருவிழா கடந்த 19ம்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனையொட்டி அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம், பொதுமக்கள் பூங்கரகம் மற்றும் அலகு குத்தியபடி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து நேற்று, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், அனைத்து வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். விழாவில் திரளான பெண்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : festival ,Chikmagiyamman Koil Maasi ,
× RELATED வெளுத்துக் கட்டிய மழையால்...